×

சென்னையில் வீடு ஒன்றில் 2500 சிம் கார்டுகள் பதுக்கல்: தலைமறைவான கேரள தம்பதிக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னை: சென்னையில் ஐஸ் ஹவுஸ் பகுதியில் 2500 சிம் கார்டுகளை பதுக்கி பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய கேரள தம்பதியை போலீசார் தேடி வருகின்றன. ஐஸ் ஹவுஸ் வைக்கோல் தொட்டி தெருவில் உள்ள வீடு ஒன்றில் கேரளாவை சேர்ந்த தம்பதி சில மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு குடியேறியுள்ளனர். இவர்கள் தங்கி இருந்த வீட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏராளமான அழைப்புகள் சென்றுள்ளன.

வருவாய் இழப்பு ஏற்பட்டதையடுத்து சந்தேகமடைந்த பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். வீட்டின் உரிமையாளர் முன்னிலையில் தம்பதி வசித்த வீட்டை திறந்து சோதனையிட்ட போது 2500 சிம் கார்டுகள், தொழில் நுட்ப உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வில் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு அதிக அழைப்புகள் சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமறைவான கேரள தம்பதியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.  


Tags : Chennai ,Kerala , Chennai, house, sim, card, hoarding, hiding, Kerala, police
× RELATED இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாப்பயணிகள்...